*ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு- ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் வழங்கினார்*

கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தீபா

போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார்.

இதுபற்றி கலெக்டர் விஜயராணி கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
LinkedIn
Share
Instagram

Make an enquiry

Hi Chennai Law Forum | Best Advocates Legal Help 24/7,

I wanted to know about “Free Legal Consultation”
Please inform me on my below email address/mobile number.
Thanks.